பொதுவாக பலன்களை தெரிந்து கொள்ள ஜாதகம், மற்றும் கைரேகை, எண்கணிதம், பிரசன்னம், ஆருடம், நிமித்தம், சகுனம், இவற்றை பார்ப்பார்கள். இதில் சப்தரிஷி வாக்கியம் என்பது வேறு வகையானது. இதற்கும் நாடி ஜோதிடத்திற்கும் சம்பந்தம் கிடையாது. பிரசன்னம் பார்ப்பது போல் தான் சோழி போட்டு பார்க்கப்படும். இதில் நிமித்தம், சகுனம், இவற்றையும் சேர்த்து பார்க்கலாம். சப்தரிஷி வாக்கியம் பார்ப்பதற்கு ஜாதகம் தேவை இல்லை. பெயர், நட்சத்திரம், ராசி, மட்டுமே போதும். அப்படி இல்லாவிட்டால், பெயர், வயது மட்டுமே போதும். ஒருவர் கேட்கும் சந்தேகங்களுக்கு துல்லியமாக இதில் விடை காணமுடியும். பிரச்சினைகளுக்கு உரிய பரிகாரங்களையும் எளிதில் கண்டு பிடிக்க முடியும். இது மூன்று தலைமுறையாக தொடர்ந்து பார்க்கப்பட்டு வருகிறது. இதை பார்ப்பதற்கு சம்பந்தப்பட்டவர்கள் நேரில் வர வேண்டிய அவசியம் இல்லை. பொதுவாக ஜாதகத்தில் அறிய முடியாத விஷயங்களைகூட சப்தரிஷி வாக்கியம் மூலம் அறிந்து கொள்ள முடியும். சில வீடுகள் வாஸ்துபடி நல்ல முறையில் அமைந்திருக்கும். இருந்தால் கூட, அந்த இல்லத்தில் தேவையற்ற தொல்லைகளை தேடி வரும்.
அதுபோன்ற நேரத்திலும் வீடுகள் சம்பந்தமான விஷயத்திற்கு சப்தரிஷி பாக்கியம் மூலம் விடை காண முடியும். பொருத்தம் பார்த்து நல்ல முறையில் திருமணம் செய்து வைத்திருப்பார்கள். ஆனால், திருமணத்திற்குப் பிறகு பல சங்கடங்களை சந்திப்பார்கள். அதற்கு கணவன் மனைவி இருவரது பெயர், ராசி, நட்சத்திரம் கொண்டு சப்தரிஷி வாக்கியம் மூலம் விடை காண முடியும். கண்ணுக்குத் தெரியாத திருஷ்டி தோஷங்கள் மற்றும் செய்வினை பிரயோகங்கள், இவற்றை சப்தரிஷி வாக்கியம் மூலம் அறிந்து கொள்ள முடியும்.
சில குடும்பங்களில் ஒரேயொரு பெண் குழந்தை பிறக்கும். சில குடும்பங்களில் பெண் குழந்தைகள் மட்டுமே பிறக்கும். ஆண் வாரிசுகள் இருக்காது. இதற்கும் சப்த வாக்கியம் மூலம் விடை காண முடியும். சில கோயில்களில் கண்ணுக்கு தெரியாத சங்கடங்கள் இருக்கும். ஆலய சம்பந்தமான சந்தேகங்களுக்கும் சப்த ரிஷி வாக்கியம் மூலம் விடை காணமுடியும். அரசியல், கலை துறை, சினிமா, வெளிநாட்டுப் பயணங்கள், ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம், போன்றவற்றில் வரும் தடைகள் பலவற்றுக்கும் சப்தரிஷி வாக்கியமும் பரிகாரங்கள் காண முடியும்.
Copyright © 2023 Om Subha Yatra. All Right Reserved. Designed by Amsonwebz.