Kasi

Kasi

காசி என்றால் ஒளி பொருந்திய தேசம் என்று பொருள். வருன் அசி என்ற இரு நதிகள் ஓடுவதால் வாரநாசி என்றும் அழைக்கப்படுகிறது. பூர்வ ஜென்மத்தில் பெரிய புண்ணியம் செய்து இருந்தால் தான் இந்த ஜென்மாவில் காசி செல்ல வேண்டும் என்ற எண்ணமே வரும். காசியின் காவல் தெய்வம் கால பைரவர். கார்த்திகை சதுர்தசியில் விச்வேச தர்சனம் விசேஷமான பலனைத் தரும்.

ப்ரளய காலத்தில் கூட காசி நகரம் அழிவதில்லை. காசியில் யமதர்மராஜனோ அவன் கிங்கரனோ ப்ரவேசிப்பதில்லை. காசியில் செய்யும் பாபத்திற்கு காலபைரவரே சிக்ஷை விதிப்பவர். காசியில் யாதொரு பாபத்தையும் செய்யக் கூடாது. பாபம் செய்தவர் காசிக்குச் செல்ல முடியாது.

தானதர்மாதி புண்யங்களைச் செய்தவர்தான் காசிக்கு செல்வர். க்ருஷ்ணனுடைய சாபத்தால் ஏற்பட்ட குஷ்டரோகத்தை அவரது புத்ரனான ஸாம்பன் காசி வாஸத்தால், தனது குஷ்டரோகத்தை போக்கி கொண்டார் எனப்படும். த்ரௌபதீ காசி வாஸத்தால் அக்ஷய்ய பாத்ரத்தைப் பெற்றாள். ஆதித்யன் காசியில் விச்வேச்வரனை ஆராதித்து சிவனுக்குக் கண்ணாக இருக்கும் பாக்யத்தையும் சிவனது எட்டு சரீரத்தில் ஒரு உடலாக இருக்கும் பாக்யத்தையும் பெற்றார். திவோதாஸன் என்ற அரசன் ப்ரும்மாவினுடைய உதவி கொண்டு பத்து அச்வமேத யாகங்களை செய்தார். அந்த இடம் தசாஸ்வமேத கட்டம் எனப்படுகிறது. கார்த்திகை மாதத்தில் கங்கா ஸ்நானம் மிக விசேஷ புண்ணியம் தரும். விச்வேச்வரர் கூட கார்த்திகை மாதம் நீராடுகிறார். ஸகல புண்ய தீர்த்தங்களும் காலையில் பஞ்சநதம் என்ற கங்கா கட்டத்திற்கு வருகின்றன. மத்யான்னத்தில், ஸகலபுண்ணிய தீர்த்தங்களும் மணிகர்ணிகைக்கு வருகின்றன.

மும்மூர்த்திகளும் தம் மனைவிகளுடனும், இந்த்ராதி தேவர்களும் நித்யம் மாத்யான்ஹிக காலத்தில் மணிகர்ணிகையில் ஸ்நானம் செய்கிறார்கள். அரிச்சந்திரா காட்டில் நீராடுவதால் தரிசனத்தால் பொய் சொன்ன பாவம் விலகும். மகா பிரளயத்தில் சகலமும் அறியும் போதும் இந்த இடம் அறிவதில்லை சகலம் ஜீவனும் இங்கு ஓடுவதால் இடம் மகாமசானம் என்றும் அழைக்கப்படுகிறது. காசியில் இயற்கையாக இறக்கும் ஜீவன்களை (ராம நாமம்) தாரக மந்திரத்தை சொல்லி சிவபெருமானே மோட்சத்திற்கு அனுப்புகிறார் என்று ராமகிருஷ்ண பரமஹம்சர் சரித்திரத்தில் தெரிவிக்கின்றார். காசீ யாத்ரா விதிகள்.

நாம் ஆத்மகடன், தேவக்கடன், பித்ருக்கடன் என்ற மூன்று கடன்களுடன் பிறக்கின்றோம். அவைகளிலிருந்து விடுபட, ப்ரயாகம், காசீ, கயா என்ற த்ரிஸ்தல யாத்ரை செய்யவேண்டும். இந்த யாத்ரை செய்பவர் முதலில் ராமேஸ்வரம் சென்று ஸேதுமணலை எடுத்துப் பூஜை செய்து, ஸேதுமாதவ, பிந்துமாதவ. வேணிமாதவ, என்று அதை மூன்று பங்காகப் பிரித்து, வேணிமாதவரை மாத்திரம் எடுத்துக் கொண்டு முதலில் ப்ரயாகைக்குச் செல்லவேண்டும். வேணிமாதவரை அங்கு விட்டுவிடவேண்டும். ஆலயம் காலபைரவர் ஆலயம். காசியில் தரிசிக்க வேண்டிய ஆலயங்கள்

காசி விஸ்வநாதர் ஆலயம் ,ஸ்ரீ விசாலாட்சி ஆலயம், அன்னபூரணி ஆலயம், காலபைரவர் ஆலயம், சோழி அம்மன் ஆலயம், வாராஹி அம்மன் ஆலயம், பிந்து மாதவன் ஆலயம். இவற்றை தவிர இன்னும் அநேக ஆலயங்கள் உள்ளன. கேதாரேஸ்வரர் ஆலயம், அனுமன் காட் ஆஞ்சநேயர் ஆலயம், காம கோடீஸ்வரர் ஆலயம், துர்கா மந்திர், காசி மன்னர் அரண்மனை

ஒருசமயம் வியாச மகரிஷி தன் 1000 சீடர்களுடன் காசிக்கு வந்தார் அப்போது சிவபெருமான் யாத பகவானின் பொறுமையை சோதிக்க எண்ணினார். வியாசர் காசிக்கு வந்த பொழுது அவருக்கு யாரும் உணவளிக்கவில்லை ஒரு நாள் இரண்டு நாள் மூன்று நாள் பொறுமையாக பார்த்துக் கொண்டிருந்தார். ஆயிரம் சீடர்களுடன் பசியால் வருந்திய வியாச பகவான், காசியை சபிக்கப் போகிறேன் என்றார். அப்போது ஒரு வீட்டின் கதவு திறந்தது.

வயதான ஒரு பெண்மணி வெளியே வந்து அனைவரும் வாருங்கள் அறுசுவை உணவு தயாராக இருக்கிறது என்று அழைத்தாள். தலைவாழை இலை போடப்பட்டது. அறுசுவை உணவுகளும் பரிமாறப்பட்டது. அனைவரும் ஆனந்தமாக உண்டபின் எழுந்தனர். அப்போது வயதான பெண்மணி பார்வதி தேவியாக காட்சி அளித்தார். பரமேஸ்வரனும் அங்கு வந்து சேர்ந்தார் பரமேஸ்வரன் வியாச பகவானை பார்த்து நீ எப்படி காசியை சபிக்க துணிந்தாய், இனி ஒரு கணமும் காசியில் நீ இருக்கக்கூடாது இங்கிருந்து கிளம்பு என்று ஆணையிட்டார்.

வியாச பகவான் தன் தவறுக்கு வருந்தசிவபெருமான் பார்வதி தேவியின் வேண்டுகோள்படி, வியாச பகவானை நோக்கி நீ கங்கை கரையில் அந்த பக்கத்தில் அமர்ந்து என்னை பூஜித்து வருவாயாக என வரம் கொடுத்தார். வியாச காசியில் அமர்ந்து சிவபெருமானை வியாச பகவான் துதிக்க ஆரம்பித்தார். தவத்தால் ஜொலிக்கும் வியாச பகவானை காண பக்தர்கள் வந்து செல்ல ஆரம்பித்தனர்.

காசிக்கு வந்து சிவபெருமானை தரிசித்த தேவர்கள்காசிக்கு வரக்கூடிய பக்தர்கள் வியாச காசியை நோக்கி செல்வதை கண்டார்கள். காசியை விட்டு விலகி வியாச காசியை நோக்கி சிவபக்தர்கள் செல்வதைக் கண்ட தேவர்கள் சிந்தாமணி விநாயகப் பெருமானிடம் துதி செய்தார்கள். வினாயக பெருமான் சிறுவன் வடிவில் வியாசரை அணுகினார். வியாசரிடம் கேள்விகள் கேட்கத் துவங்கினார். "அந்தக் காசிக்கும் இந்தக் காசிக்கு என்ன வித்தியாசம்?" என்றார் அங்கு விஸ்வநாதர் இருக்கிறார், இங்கு நானும் விஸ்வநாதரும் இருக்கிறேன்". "அந்தக் காசி உயர்ந்ததா இந்தக் காசி உயர்ந்ததா" என்று வினாயகர் கேட்க, அது காசி மட்டுமே இது வியாச காசி என்றார்.

அப்படியானால் காசியை போலவே இங்கு இறந்தாலும் முக்தி கிட்டுமா என கேட்டார், ஆமாம் என வியாசர் கூறுகின்றனர். விநாயகப் பெருமான் முக்தி என்றால் என்ன? என கேட்க, வியாசபகவான் மனிதப்பிறவி மீண்டும் எடுக்காமல் இருத்தல் என்றார். அப்படியானால் மனிதனாக இல்லாமல் வேறு கழுதை யாக பிறப்பார்களோ? என்றார். வியாசர்பொறுமை இழந்தார். சிறுவனோ விடாப்பிடியாக, சொல்லுங்கள் இங்கு இறந்தால் என்ன பிறவி கிடைக்கும் என்று சொல்லுங்கள் என்றான் கோபம் கொண்ட வியாசர்.

ஆமாம், கழுதைப் பிறவிதான் கிட்டும் என்றார். இங்கு இறந்தால் கழுதைப் பிறவிதான் கிடைக்குமா? அப்படியானால் அப்படியே ஆகட்டும் என்று சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டு சிறுவனாக வந்த விநாயகர் மறைந்து விட்டார். அவர் மறைந்ததும்தான் வந்தது சிறுவன் அல்ல விநாயகப் பெருமான் என்பதையும் அகம்பாவம் தனக்கு வந்ததினாலேயே இந்த நிலை வந்தது என்பதையும் வியாசர் புரிந்து கொண்டு விநாயகரைத் தொழுதார்.

காசிக்கு வருபவர்கள் உனது வியாச காசிக்கும் வந்து நீ ஸ்தா பித்த சிவலிங்கத்தையும் தரிசிப்பார்கள் அப்படி தரிசித்தால்தாள் அவர்களுக்கு காசி யாத்திரையின் பூரண பலன் கிடைக்கும் என்று வரமளித்தார் விநாயகர். அதுமுதல் காசிக்குச் செல்பவர்கள் வியாச காசியையும் அவசி யம் தரிசிக்க வேண்டும் என்பது வழக்கத்தில் வந்தது.

அதே சமயம் வியாசர் சொன்ன சொல் பலித்து விடும் என்பதால் பலரும் வியாச காசியில் இரவு தங்குவதில்லை. வியாச லிங்கத்தை தரிசித்துவிட்டு உடன் காசிக்குத் திரும்பி விடுகின்றனர் வியாச காசிக்குச் செல்லாமல் திரும்பினால் காசியாத்திரை செய்த பலன் கிடைக்காது. கௌடி மாதா ஆலயம், முன்பொரு சமயம் காசியின் எல்லையில் வசூரி மாதா என அழைக்கப்படும் ஒரு பெண் இருந்தாள். இவள் காசிக்கு வரக்கூடிய பக்தர்களின் புண்ணியத்தை கவர்ந்து கொண்டாள். காசிக்கு வந்து பின் புண்ணியத்தை இழந்து சென்ற பக்தர்கள் மனம் வருந்தி காசி விஸ்வநாதரிடம் முறையிட்டார்கள்.

அதை கண்ட விஸ்வேஸ்வரர் காசிக்கு வரும் பக்தர்கள் அனைவரையும் கௌடி மாதாவிடம், நீ காசிக்கு வரும் பக்தர்களின் புண்ணியங்களை கவர்ந்துகொள்ளாதே, அவர்கள் என்னை தரிசித்தபின் உன்னையும் வந்து தரிசிப்பார்கள். உன்னை தரிசிக்கும்போது சோழியை உனக்கு திருவடியில் போட்டு வணங்குவார்கள். அப்போது அவர்கள் சோழி பலன் உனக்கு காசி புண்ணியம் எனக்கு என்று பிரார்த்தனை செய்வார்கள். அதுபடி நீ அவர்களுக்கு வரம் கொடு. என்னை தரிசிப்பவர்கள் கட்டாய உன்னையும் தரிசிக்கும்படி செய்கிறேன்என்றார். அது முதல் அந்த வசூரி அம்மன் கௌடி மாதா என்று அழைக்கப்படுகிறார். இன்றும் காசி செல்பவர்கள் (சோழி அம்மன்) கௌடி மாதாவை சோழி போட்டு வணங்கி செல்கின்றனர்.