ஜீவதோர் வாக்ய கரணாத் ப்ராத்யாப்தம் பூரி போஜணாத் கயாயாம் பிண்ட தாணாத் த்ரிபி: புத்ரஸ்ய புத்ராய, ஒரு மகனின் கடமை அவன் தாய் தந்தை சொற்படி நடப்பது. அவர்கள் மறைந்த பின் வருடாவருடம் அவர்கள் மறைந்த அந்த திதியில் அவர்களுக்கு திதி கொடுப்பது சிரார்த்தம் மேலும் வாழ்நாளில் ஒருமுறையாவது சென்று அங்கு அவர்களுக்கு பிண்ட பிரதானம் செய்வது இந்த மூன்றும் எவன் செய்கிறானோ அவன் தான் பிறந்த புத்திரன் என்று சாத்திரங்கள் கூறுகிறது.நம் வம்சத்தில் பிறந்த யாராவது ஒருவர் வந்து நமக்கு ஒரு பிண்டம் அளிக்க மாட்டானா என்று அட்லி அவ்விடத்தில் தொற்றுகள் காத்துக் கொண்டிருப்பார்கள் இந்த அயோக்கியத் தனம் என்பது காசியிலிருந்து வாகனங்கள் மூலம் செல்லும் போது சுமார் ஆறு மணி நேரத்தில் அடைய முடியும் என்று தங்குவதற்கு நிறைய இடங்களும் உண்டு பித்ரு காரியங்கள் செய்து வைக்க பிராமணர்களும் நிறைய பேர் உண்டு.
ஸ்வேத வராஹ கல்பத்தில் இந்த க்ஷேத்திரத்தில் கயாசுரன் என்ற ஒரு அசுரன் யாகம் செய்தான் அவன் பெயரால் இந்த இடம் பெயர் சேத்திரம் என்று பிரசித்தியானது. கயாவிற்கு கல்கத்தாவிலிருந்து செல்லமுடியும். கிருதயுகத்தில் கயாசுரன் என்ற பிரம்மாவின் மானஸ புத்திரன் ஒருவன் கடும் தவம் செய்தான் அதன் பலனாக அவனை யார் தொட்டாலும் லும் அவர்கள் வைகுண்டம் சென்று விடுவார்கள். இதை அறிந்த தேவர்கள் பிரம்மாவிடம் சென்று இது போன்று அனைவரும் வைகுண்டம் சென்று விட்டால் எமவாதனை இல்லாமல் போய்விடும் இதற்கு என்ன செய்வது, பிரபஞ்ச கடினமாகி விடும் என்றார்கள். பின் அனைவரும் வைகுண்டம் சென்று விஷ்ணு பகவானிடம் முறையிட அவர் நீங்கள் அவர்களிடம் செல்லுங்கள் அவன் சிறந்த பக்தர் அவளை எளிதில் அழிக்கவும் முடியாது நீங்கள் ஒரு யாகம் நடத்த வேண்டும் அதனால் அதற்கு தக்க இடத்தை கொடு என்று சொல்லுங்கள் அவன் எந்த இடம் வேண்டும் என்று கேட்பான் அதற்கு நீங்கள் அவன் சரிதத்தை கேளுங்கள் அவன் கட்டாயம் சம்மதிப்பான் என்றார்.
அதன்படி அவர்கள் அவர்கள் கயாசுரன் அவரிடம் கேட்க அவனும் அதற்கு இசைந்து என் உடல் மீது நீங்கள் யாகம் நடத்துகின்றார்கள் பல மகரிஷிகள் கூடி யாகத்தை தொடங்கினார்கள் ஆனாலும் அசையத் தொடங்கியது அப்போது இந்த தலையை அசையாமல் இருக்க வைக்க என்ன செய்ய வேண்டும் என்று தேவர்கள் கேட்கஅதற்கு பிரம்மா நான் ஒரு வழி சொல்கிறேன் ஒரு சமயம் தர்ம ராஜன் மகள் தர்ம விரதை. இவள் நல்ல கணவனை அடைய வேண்டி தவம் இருந்தாள். பிரம்மாவின் மகனாக இருந்த மரீசி மகரிஷியை திருமணம் செய்கிறாள். அப்போது மகிழ்ச்சி மகரிஷி பணிவிடை செய்து வந்த தர்மவிரதை பிரம்மா ஆசிரமத்திற்கு வந்ததால் அவரை உபசரிக்க சென்றாள். இதை அறியாத மரிசி தன்னுடைய உபசரிப்பில் தர்மவிரதை குறையை ஏற்படுத்தி விட்டதாக நினைத்து தர்மவிரதையை நீ கல்லாக போ என்று சபித்தார்.
கல்லாக மாறிய தர்மவிரதை விஷ்ணு பகவானை நோக்கி தவம் செய்தாள். அவளுக்கு விஷ்ணு பகவானை கயாசுரனை வைத்து தேவர்கள் யாகம் செய்யும் பொழுது அவன் தலை ஆசையும். அப்போது அவன் தலையில் உன்னை எடுத்துக்கொண்டு சென்று வைப்பார்கள் உன் கல்லின் மீது சகல தேவர்களும் வாசம் செய்வார்கள். அங்கே யார் (முன்னோர்களுக்கு) பித்ருக்களுக்கு பிண்டம் வைக்கிறார்களோ அவர்களது பித்ருக்கள் மோட்சத்தை அடைவார்கள் என்று வரம் கொடுத்தார். இதை பிரம்மா ஞாபகப்படுத்தி கயாசுரன் தலை மீது கல்லாய் இருந்த தர்மவிரதையை கொண்டுபோய் வைத்தார்கள். விஷ்ணுவிடம் ஒரு வரம் கேட்டான்.
சுவாமி, உலகில் பிள்ளையாய்ப் பிறந்தவன் அவன் பெற்றோர் உயிரோடு இருக்கும் வரை அவர்கள் மனம் கோணாமல் நடக்க வேண்டும். பெற்றோர் காலமான பிறகு அவர்களுக்குத் திதி கொடுத்து அன்னதானம் செய்ய வேண்டும். முக்கியமாக என் பெயரைக் கூறி சிரார்த்தம் செய்ய வேண்டும். என் சரீரமாகிய இந்த இடத்திற்கே வந்து பல்குனி நதி, விஷ்ணு பாதம், அட்சயவடம் முதலிய மூன்று முக்கிய இடங்களில் திதி கொடுத்தால், அவனது மூதாதையர் நேரே வைகுண்ட பதவியடையும்படி அருள வேண்டும் என்று கயாசுரன் பிரார்த்தித்தான்.
கயா க்ஷேத்திரம் கயாசுரனின் உடலாகவே கருதப் படுகிறது. கயா ஷேத்திர மகிமை: ஒரு சமயம் ராமபிரான் சீதை, லட்சுமணர்ரோடு வனவாசம் வரும்போது, தசரத மகாராஜாவின் சிரார்த்த தினம் வந்தது. சிராதத்திற்கு தேவையான பொருட்களை எடுத்து வருவதற்காகவே ராமபிரானும் லட்சுமணனும் சென்றுவிட்டனர். சீதை மட்டும் இருந்தாள். திதி கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. தசரதர் நேரடியாக வந்து விட்டார். எனக்கு பசியாக இருக்கிறது என தசரத மகாராஜா கேட்க, சீதா தேவி அங்கிருந்த மாவு உருண்டைகளை உருட்டி அவருக்கு கொடுத்து விட்டாள். தசரதர் அதை சாப்பிட்டு விட்டு சென்று விட்டார். இது முடிந்து சில மணி துளிகளுக்குபின் ராமபிரான் சீதை இருக்கும் இடத்தை விட்டு வந்தார். சீதை தசரத மகாராஜாவுக்கு திதி கொடுத்து விட்டேன் என்றாள்.
அவர் சென்று விட்டார் என்று சொன்னாள். இதை உலகம் ஏற்குமா என்று ராமபிரான் எண்ணி முதலில் பிராமணனிடம் நீ இதற்கு சாட்சியாக என்று கேட்டார். பெண் திதி கொடுத்தாள் என்று சொன்னால் தவறாகப் போய்விடும் என்று எண்ணி பிராமணர் நான் பார்க்கவில்லை என்று சொல்லிவிட்டார். அங்கிருந்த பல்குணி நதியிடம் நீ இதை பார்த்தாயா என்று ராமபிரான் கேட்க, பல்குனி நதி நான் பார்க்கவில்லை என்று சொல்லிவிட்டது. அங்கு நின்று கொண்டிருந்த பசுவிடம் நீ இதை பார்த்தாயா என்று கேட்க, பசுவும் எனக்கு தெரியாது நான் பார்க்கவில்லை என்று சொல்லிவிட்டது. அங்கிருந்த அக்னி பகவானிடம் ராமர் கேட்க அக்னி பகவானும் நான் பார்க்கவில்லை என்று சொல்லிவிட்டார்.
பின் அக்ஷய வடத்திடம் ஸ்ரீராமபிரான் நீ பார்த்தாயா என்று கேட்க, அட்சய வடம் சீதாபிராட்டி திதி கொடுப்பதை நான் பார்த்தேன். சத்தியம், சத்தியம், சத்தியம் என்று கூறியது. சீதாதேவி பிராமணனை பார்த்து, பார்க்க வில்லை என்று பொய் சொன்னதால் இன்று முதல் எப்போதும் நீ பசி உடனே இருப்பாய் என்றாள். பல்குனி நதியைப் பார்த்து நீ இன்றுமுதல் வறண்டு போய் விடுவாய் என்றாள். பசுவைப் பார்த்து இனி உன் முகத்தில் யாரும் பார்க்க மாட்டார்கள் என்றள். அக்னியை பார்த்து இனி நீ நல்லது கெட்டது அனைத்தையும் எறிப் பாய், உனக்கு நல்லது கெட்டது பேதம் இருக்காது என்று சாபம் கொடுத்தாள். அட்சய வடத்திடம், இன்று முதல் உன் நிழலில் யார் பித்ருக்களுக்காக பிண்டம் வைக்கிறார்களோ அவர்களது 10 தலைமுறையும் மோட்சத்திற்கு செல்வார்கள் என்று வரம் கொடுத்தாள்.
பிராமணர்கள், அக்னி, பசு, பல்குனி நதி, சீதாயிடம் மன்னிப்பு கோரின. சீதா மனமிரங்கி பல்குனி நதியிடம் நீ வறண்டு போனாலும், உன் பெயரை சொன்னாலே அவர்களுக்கு உன் நதியில் குளித்த புண்ணியம் கிடைக்கும் என்றாள். அக்னியிடம் நீ நல்லதையும் கெட்டதையும் இன்று முதல் எறிப்பாய் ஆனாலும், இன்று முதல் எல்லா விதமான சுபகாரியங்களும் நீ இல்லாமல் நடைபெறாது என்றாள். பிராமணனிடம் நீ இன்றுமுதல் யார் உனக்கு அன்ன தானம் செய்ய கிறார்களோ, அவர்களது குடும்பத்தில் அன்னத்திற்கு குறைவே இருக்காது என்றாள். பசுவிடம் இன்று முதல் உன் முகத்தை யாரும் பூஜிக்க மாட்டார்கள், ஆனால், பிருஷ்ட பாகத்தை பூஜித்தால் கட்டாயம் அவர்களுக்கு லக்ஷ்மி கடாக்ஷம் பெருகும் என்றாள்.
அட்சய வட பெருமை! ராமரும் சீதையும் இந்த ஆல மரத்தின் அடியில் தான் தசரதருக்கு ச்ராததமும் பிண்டம் கொடுத்தாக இராமாயணம் கூறுகின்றது. இதன் மூலம் போதாதா அக்ஷயவடத்தின் மகிமையை புரிந்துக் கொள்ளலாம். காய், கனி, இலை கயா சராத்தம் முடிந்து திரும்புபவர்கள் அக்ஷய வடத்தின் நிழலில் ஏதாவது ஒரு கறிகாய் ஒரு பழம் ஒரு இலையை “இனி இந்த ஜன்மத்தில் உட்கொள்வதில்லை" என்று விரதம் மேற்கொள்ள வேண்டும் இந்த மூன்றையும் எவைகள் என்று புரோகிதரிடம் கூறியதும் நமக்கு அவர் அதற்கு சங்கல்பம் செய்து வைக்கிறார். அந்த சங்கல்ப முடிவில் கயாவாளி அந்தணர் ஆமோதிக்கும் வகையில் பிரதி வசனம் கூறுகிறார். இத்துடன் அட்சய வட காரியங்கள் நிறைவேறுகிறது.
கயாவில் இருந்து புத்தகயா என்பது சுமார் பதினொரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. ஒரு அரை மணி நேரத்தில் நாம் அங்கு சென்று விட முடியும். இங்கு புத்தர் அமர்ந்து தியானம் செய்து ஞானம் பெற்றதாக சரித்திரம் கூறுகிறது. அங்கு உள்ள அரச மரத்தை புத்தர் தியானம் செய்த போதி மரம் என்று கூறுகிறார்கள். அவர் அமர்ந்த கல் மேடை பொத்தான் சிம்மாசனம் என்று தற்போது அழைக்கப்படுகிறது அங்கு புத்த பகவானின் மிகப் பெரிய கோயில் அவரது சிலையும் உள்ளது. கயா பௌத்தர்கள் இந்துக்கள் அனைவருக்கும் ஒரு புனித ஸ்தலமாக அமைந்துள்ளது. புத்தகயா வாசலில் இடது புறத்தில் சரஸ்வதி தேவி கோயில் உள்ளது. அங்கு வட்ட வடிவமான கல் காணப்படுகிறது. இங்கு அமர்ந்து புத்தர் தியானம் செய்ததாக கூறுகிறார்கள். அந்த கல்லை தொட்டபடி அமர்ந்து கொண்டு பயணிகள் சிறிது நேரம் தியானம் செய்கிறார்கள். அங்கு சற்று தொலைவில் வித்தியாசமான நிறைய சிறிய கோயில் கள் உள்ளது. இதெல்லாம் ஜகத் குரு சங்கராச்சாரியார் சீடர்களின் சமாதி என்று கூறுகிறார்கள்.
அம்மாவிற்கு வைக்கும் 16 பிண்டத்தை பற்றிய மாத்ரு ஷோடஸி ஸ்லோகமும் அர்த்தமும்.
1) கர்பஸ்ய உத்கமநே துகம விஷமே பூமி வர்த்மநி! தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம்!! என்னைக் கர்ப்பத்தில் தாங்கிய படி, மேடு பள்ளங்களில் ஏறி இறங்கும் போது என் அம்மா என்ன வேதனைகளை அனுபவித்தாளே. அதனால் எனக்கு ஏற்பட்ட பாவத்திற்குப் பரிகாரமாக இந்தப் பிண்டத்தைத் தருகின்றேன்.
2) மாஸி மாஸி க்ருதம் கஷ்டம் வேதநா ப்ரஸவே ததா! தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம்!! ஒவ்வொரு மாதத்திலும், அதன் பின்னர் பிரசவத்தின் போதும் என் தாயக்கு என்னால் ஏற்பட்ட வேதனைகளை உண்டாக்கிய பாவத்திற்குப் பரிகாரமாக இப்பிண்டத்தைத் தருகிறேன்.
3) பத்பயாம் பரஜாயதே புத்ரோ ஐநந்யா: பரிவேதநம்! தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம்!! என் அன்னை வயிற்றில் நான் கால்களால் உதைத்து உண்டாக்கிய வேதனையால் எனக்குச் உண்டான பாவமூட்டைக்குப் பரிகாரமாக இந்தப் பிண்டத்தைத் தருகின்றேன்.
4) ஸம்பூர்ணே தசமே மாஸி சாத்யந்தம் மாத்ருபீடநம்! தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம்!! என் தாய் என்னைச் சுமந்த போது அவளுக்கு ஏற்பட்ட வேலைகளால் எனக்குச் சேர்த்த பாவத்தைப் போக்க இப்பிண்டத்தைத் தருகின்றேன்.
5) சைதிலயே பரஸவே பராபதே மாத விநததி துஷ்க்ருதம! தஸ்ய நிஷகரமணார்தாய மாதருபிண்டம் ததாம்யஹம்!! என் அன்னையின் கர்ப்ப காலத்தில் ஏற்பட்ட களைப்பு, மூர்ச்சை போன்றவற்றால் வந்த வேலைகளால் எனக்கு உண்டான பாவத்தைப் போக்க, பரிகாரமாக இப்பிண்டத்தைத் தருகிறேன்.
6) பிபேச்ச கடுத்ரவயாணி க்வாதாநி விவிதா நிச! தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம்!! என்னை வியாதி உண்டாகாமல் இருக்க, என்ன கசப்பான மருந்துகளைச் சாப்பிட்டாளோ, என் தாய், அவளுக்கு நான் செய்த இந்தக் கஷ்டத்தால் உண்டான பாவத்தைப் போக்க, பரிகாரமாக இந்தப பிண்டத்தைத் தருகின்றேன்.
7) அக்நிநா சோஷயேத்தேஹம் தரிராத்ரோ போஷணேந! தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம்!! நான் பிறந்த போது மூன்று நாட்கள் அன்ன ஆகாரமின்றி பசியால் என் அம்மா நொந்தாளே. அதனால் எனக்கு ஏற்பட்ட இந்த பாவத்திற்குப் பரிகாரமாக இந்தப் பிண்டத்தைத் தருகின்றேன்.
8) ராத்ரௌ மூத்ரபுரீஷாபயாம் க்லிந்ந ஸ்யாந்மாத்ரு கர்பட! தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம்!! இரவில் நான் என் அம்மா ஆடைகளை, மல மூத்திரத்தால் அசுத்தம் செய்த பாவத்திற்குப் பரிகாரமாக இந்தப் பிண்டத்தைத் தருகிறேன்.
9) தயா விஹ்வலம் பத்ரே மாதா ஹ்யந்தம் ப்ரயச்சதி! தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம்!! தனக்கு இல்லாவிடினும் என் பசி, தாகம் தீர்க்க அவ்வப்போது உணவும் நீரும் எனக்குத் தந்தாளே என் தாய், அவளை துன்புறுத்திய பாவத்தை போக்க பரிகாரமாக இப்பிண்டத்தைத் தருகிறேன்.
10) நிவாராத்ரௌ ஸதா மாதா ததாதி நிர்பாம் ஸ்தநம்! தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாதருபிண்டம் ததாம்யஹம்!! என் அம்மாவிடம் பால் அருந்தும் போது அவளை நான் துன்புறுத்தினேனே. அதனால் விளைந்த பாவத்திற்குப் பரிகாரமாக இந்தப் பிண்டத்தைத் தருகிறேன்.
11) மாகே மாஸி நிதாகே சசிரேத்யந்தது கிதா தஸ்ய! நிஷ்க்ரமணார்தாய மாதருபிண்டம் ததாம்யஹம்!! மாக மாதத்தில் சிசிர வெயிலில் என்னைக் காக்கத் தன் உடலை வருத்திக் கொண்டாளே என் தாய் அவளுக்கு நான் தந்த இந்தத் துன்பங்களால் எனக்கு உண்டான பாபங்களைப் போக்கிக் கொள்ளப் பரிகாரமாக இந்தப் பிண்டத்தைத் தருகின்றேன்.
12) புத்ரே வ்யாதி ஸமாயுக்தே மாதா ஹா கரந்த காரிணி! தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம்!! எனக்கு வியாதி உண்டான போது மகன் நோய்வாய்ப்பட்டானே என்று கவலையால் வாடி இருந்தாளே என் அம்மா. அவளுக்கு விளைவித்த அந்த மனத்துயருக்குப் பரிகாரமாக இந்தப் பிண்டத்தைத் தருகின்றேன்.
13) யமத்வாரே மஹாகோரே மாதா சோசதி ஸந்ததம்! தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம்!! யமலோகம் செல்லும் என் தாய் கோரமானவற்றையெல்லாம், கடந்து செல்வதற்குத் பக்க துணை நிற்பதற்காக இந்தப பிண்டத்தைத் தருகின்றேன்.
14) யாவத் புத்ரோ ந பவதி தாவந்மாதுச்ச சோசனம்! தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம்!! என் தாய்க்கு நான் தந்த வேதனைகளுக்குப் பரிகாரமாக, அறிவுள்ள புத்திரர்கள் அவர்களது அம்மாவிற்கு செய்வதை போல் நானும் இப்பிண்டத்தைத் தருகின்றேன்.
15) ஸ்வல்ப ஆஹாரஸ்ய கரணீ யாவத் புத்ரச்ச பாலக! தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம்!! நான் நன்றாக வளர்வதற்காக, தனக்கு ஆகாரம் இல்லாமல்கூட கஷ்டப்பட்டாளே அந்தத் அன்னைக்கு நான் தந்த வேதனைகளுக்குப் பரிகாரமாக இப்பிண்டத்தைத் தருகிறேன்.
16) காதரபங்கா பவேந்மாதா ம்ருத்யு ஏவ ந ஸம்சய! தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம்!! கர்ப்பத்தில் இருந்த போதும், குழந்தையாக. இருந்த போதும் மரணவேதனையை போல் பல கஷ்டங்களை நான் என் அம்மா விற்க்கு தந்ததற்கு பரிகாரமாக இந்த பிண்டத்தைத் தருகின்றேன்.
அம்மாவிற்காக 16 ஸ்லோகத்தை சொல்லி பிண்டம் வைக்கும் போது (பிராமணர்கள் சோற்றாலும் மற்றவர்கள் மாவினால்) பலர் மனம் உருகி கண்ணீர் சிந்துவதை கயாவில் காணமுடியும்.
ஜீவதோர் வாக்ய கரணாத் ப்ராத்யாப்தம் பூரி போஜணாத் கயாயாம் பிண்ட தானாத் த்ரிபி: புத்ரஸ்ய புத்ராய என்ற வாக்கிய படி மகனாக பிறந்து அவருக்கு மூன்றாவது தடவையாக பின் தாய்க்கு தந்தைக்கு பிண்டம் அளிப்பது பற்றி சொல்லப்பட்டுள்ளது.
பிண்டதானம் அஸ்மத் குலே மிகுநாயேசு-கதிர்யோழாம் தனித்தேர் தேஷாம் உத்தாணரித்தாய்இதம்பிண்டம் ததாம்யஹம்
1) இன்று நமது குடும்பத்தில் இறந்தவர்களுக்கு மற்றும் கதி இல்லாதவர்களுக்கும் அவர்கள் செய்வதற்காக இந்த பிண்டத்தை வைக்கிறேன்.
2) மாதா மஹ குலேயோ-கதிர்யேஷாம் நவிற்பதே! தேஷாம் உத்தரணார்த்தாய-இதம்பிண்டம் ததாம்பஹம்!! மாதா பக்கத்தில் பிறந்தவர்களுக்கு அவர்களின் கதி இல்லாதவர்களுக்கும் இந்த இரண்டாவது பிண்டத்தை வைக்கிறேன்.
3) பந்துவர்க்க குலேயோ கதிர் யேஷாம் நவித்யதே! தேஷாம் உத்தாணார்த்தாய-இதம்பிண்டம் ததாம்பஹம்!! பந்து வர்க்கத்தில் பிறந்தவர்களையும் அவர்களின் கதி இல்லாதவர்கும் வேண்டி அவர்களுக்காக இந்த பிண்டத்தை செய்கிறேன்.
4) அஜாத தந்தா யேகேசித் யேசகர்ப்பே ப்பிடிதா! தேஷாம் உத்தாணார்த்தாய-இதம்பிண்டம் ததாம்யஹம்!! பல் முளைக்காதவர்களும் கர்ப்பத்திலேயே மரித்தவர் களாயுமுள்ளவர்களை, மோட்சம் வேண்டி இந்த பிண்டத்தை அளிக்கிறேன்.
5) அக்நி தக்தாபர்சயே கேகித்-நாக்நி தக்தாஸ்ததாபரே, வித்யுச் சௌாஹதாயேச-தேப்ய பிண்டம் தாம்யஹம்!! தீயினால் எரிக்கப்பட்டு இறந்தவர்களுக்கும் தீயினால் எரிக்கப்படாமல் ஜலம் முதலியவைகளிலோ காட்டிலோ இடியினாலோ இறந்தவர்களுக்கும் திருடர்களால் கொல்லப்பட்டவர்களுக்கும் மோட்சம் வேண்டி நான் பிண்டம் அளிக்கிறேன்.
6) தாவாதாஹே ம்ருதாயசே-ஸிம்ஹவ்யாக்ர ஹதார்சயே! தம்ஷ்ட்ரிபி: பாருங்கிபிர்வாபி-தேப்ய: பிண்டம் ததாம்யஹம்!! காட்டுத் தீயினால் இறந்தவரும் ஸிம்ஹம் புலி முதலியவைகளாலும் கோரப் பல்லுள்ளவைகளாலும் கொம்புள்ளவைகளாலும் கொல்லப்பட்டவர்க்கு பிண்டம் அளிக்கிறேன்.
7) உத்பந்தந ம்ருதாயேச-விஷாஸ்த்ர ஹதாச்சயே! ஆத்மோப காதிநோயேச-தேப்ய பிண்டம் தாம்யஹம்!! தூக்கு போட்டுக்கொண்டும் விஷத்தாலும் ஆயுதத்தாலும் இறந்தவர் தற்கொலை செய்து கொண்டவர்களும் இந்த பிண்டத்தை அளிக்கிறேன்.
8) அரண்யே வர்த்மநிவநே-க்ஷுத்ருட் ப்யாம் வாபியே ஹதா! பூத ப்ரேத பிசாசார்ச-தேப்ய பிண்டம் ததாம் யஹம்!! பெருங் காட்டிலோ வழியிலோ சிறு வநத்திலோ பசி தாஹத்தினாலோ இறந்தவர்க்கும் பூத ப்ரேத பிஸாச ரூபமாக இருப்பவர்க்கும் இந்த பிண்டம் அளிக்கிறேன்.
9) ரௌரவேச அந்ததாமிஸ்ரே-காலஸூத்ரேச யேஸ்திதா! தேஷாம் உத்தரணார்த்தாய-இமம் பிண்டம் ததாம்யஹம்!! ரெளரவம் அந்த தாமிஸ்ரம் காலஸூத்ரம் முதலிய நரகங்களில் இருப்போர்களுக்காக இந்த பிண்டத்தை அளிக்கிறேன்.
10) அஸிபத்ரவநே கோரே -கும்பிபாகேச யேஸ்திதா! தேஷா முத்தரணார்த்தாய-இமம் பிண்டம் ததாம் யஹம்!! கோரமான அஸிபத்ர வநம் கும்பீபாகம் ஆகிய நரகங்களில் உள்ளவர்கள் உய்ய வேண்டி இந்த பிண்டத்தை அளிக்கிறேன்.
11) அநேக யாதநாஸம் ஸ்தா - ப்ரேத லோகேச யே கதா தேஷாம் உத்தரணார்த்தாய - இமம் பிண்டம் ததாம் யஹம்!! பலவகை வேதனை நிறைந்த ப்ரேத லோகத்திலிருப்பவர்கள் உய்ய வேண்டி இந்த பிண்டத்தை அளிக்கிறேன்.
12) நாகேஷு ஸமஸ்தேஸு - யாதநாஸுச யேஸ்திதா! தேஷாம் உத்தர ணார்த்தாய - இமம் பிண்டம் ததாம் யஹம்!! எல்லா விதமான நரகங்களி உள்ளவர்களுக்கு மோட்சம் வேண்டி இந்த பிண்டத்தை அளிக்கிறேன்.
13) பாயோநி கதா சே-பக்ஷிகீட ஸரீஸ்ருபா! திர்யக் யோநிகதா யேச - தேப்ய! பிண்டம் ததாம்யஹம்!! பசு பக்ஷி புழு பாம்பு போன்ற மிருகப் பிறவி பெற்ற பித்ருக்களை உய்ய இந்த பிண்டத்தை அளிக்கிறேன்.
14) ஜாத்யந்தா ஸ்ஹஸ்ரேஷு ப்ரமந்தி ஸ்வே கர்மண மாநுஷ்யம் துர்லபம் யேஷாம் - தேப்ய பிண்டம் ததாம்யஹம்!! தான் செய்த கர்மாவினால் பல ஆயிரம் பிறவிகளில் தவித்து கொண்டிருக்கும் மானிடப் பிறவி பெற முடியாதவர்களாயும் இருக்கின்ற பித்ருக்களைக் கரையேற்ற வேண்டி இந்த பிண்டமளிக்கிறேன்.
15) திவி அந்தரிக்ஷ பூமிஷ்டா - பிதரோ பாந்த வாதய: i அஸம்ஸ்கிருதா ம்ருதா யேச தேப்ய: பிண்டம் ததாம்யஹம்!! அந்தரிக்ஷத்திலும் பூமியிலும் உள்ளவர்களும், இறந்து ஸம்ஸ்காரம் எதுவும் இல்லாதவர்களாயுமிருக்கின்ற பித்ருக்களுக்கும் பந்துக்களுக்கும் பிண்டம் அளிக்கிறேன்.
16) யேகேசித் ப்ரேத ரூபேண - வர்த்தந்தே பிதரோமம! தேஸர்வே த்ருப்தி மாயாந்து - பிண்டதாநேந ஸர்வதா!! ப்ரேத ரூபமாக இருக்கின்ற எனது பித்ருக்கள் எல்லோரும் இந்த பிண்ட தால் எப்போதும் த்ருப்தியுள்ளவர்களாக இருக்கட்டும்.
17) யே அபாந்தவா பாந்தவாவா - அன்ய ஐன்மதி பாந்தவா தேஷாம் பிண்டோ மயாதத்த - அக்ஷய்ய முபதிஷ்டதாம். இந்த ஜன்மாவில் எனக்குப் உறவு இல்லாதவரோ, அல்லது உறவோ வோ வேறு ஜன்மாவில் எனக்கு உறவோ அவர்களுக்குப் பிண்டமளிக்கிறேன். அது அக்ஷய்யமாக இருக்கட்டும்.
18) பித்ருவம்போ ம்ருதாயேச மாத்ருவம்சே யே ம்ருதா! குருர்வஸுர பந்தூநாம் யேசாந்யே பாந்தவாஸ்மிருதா!! பித்ரு வம்ஸம். மாத்ரு வம்ஸம், குரு, மாமனார், பந்து ஆகிய இவர்களைச் சார்ந்தவர்களும், இறந்தவர்களுமான பித்ருக்களுக்கு இந்த தர்ம பிண்டத்தை கொடுக்கிறேன்
19) யே மே குலேலுப்த பிண்டா புத்ரதார விவர்ஜிதா க்ரியா யோக ஹதாயேச ஜாத்யந்தா பங்கவஸ்ததா!! எனது குடும்பத்தில் பிண்டம் கிடைக்காதவரும், மனைவி மக்களில்லாதவரும், பரலோக கர்மாவோ யோகமோ இல்லாதவரும், பிறவிக் குருடரும், பிறவி நொண்டியாகவும் இறந்தவர்க்கும் இது
20) தர்ம பிண்டோ மயா தத்த அக்ஷய்ய முபதிஷ்டதாம்! தர்ம பிண்டத்தை கொடுத்தேன். இது அழிவில்லா ஆனந்தத்தைத் தரட்டும்.
21) ஆப்ரும்மணோ யே பித்ருவம்மா ஜாதா மாதுஸ்ததா வம்சாபவா மதீயா! குலத்வயேஸ்மிந் மம தாஸப்ருத்யா ததைவ மாமாச்ரித ஸேவகாஸ்ச!! ப்ரும்மா முதல் பித்ரு வம்ஸத்திலும், மாத்ரு வம்ஸத்திலும் பிறந்தவர்களுக்கும் இரு வம்ஸத்து தாஸர் மற்றவர்கள், என்னை அண்டிய வேலையாள் ஆகியவர்களுக்கும்
22) மித்ராணி ஸக்ய பரவபர்ச விருக்ஷா துஷ்டாஹ்ய துஷ்டாஸ்ச க்ருதோபகாரா! ஜன்மாந்தரேயே மம ஸங்கதாபச்ச தேப்ய ஸ்வதா பிண்டமஹம் ததாமி!! நண்பர்கள் பஸுக்கள், மரங்கள், துஷ்டர், ஸாது, உதவி செய்தவர் ஆகிய அனைவர்க்கும் பிண்டம் தருகிறேன். எல்லோரும் இதனால் திருப்தி அடையட்டும்.
Copyright © 2023 Om Subha Yatra. All Right Reserved. Designed by Amsonwebz.