Kumari Goddess

Kumari Goddess

குமாரி காட் / (வாழும் பெண் தெய்வம்) அனுமந் தோக அருகில் அமைந்துள்ளது குமாரி காட் இல்லம். பொதுவாக நேபாளிகள் இந்த இடத்தை ஒரு கோயில் மாதிரி கருதுகிறார்கள். இங்கு சிறு வயது பெண் ஒருத்தி தேர்ந்தெடுக்கப்பட்டு நவராத்திரி நாளில் பலவிதமாக பரிசோதிக்கப்பட்டு பின் குமாரி கடவுள் என்று தேர்ந்தெடுக்கிறார்கள். (தூய பெண் தெய்வம் என்று அழைக்கப்படுவாரள்) மல்லா அரச வம்சத்தை ஷா அரச வம்சம் வீழ்த்திய‌ பிறகு ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் நடைபெறும் இந்திரஜித் திருவிழா வில் இந்த வாழும் பெண் தெய்வத்துடன் ஒரு வண்டியில் அலங்காரத்துடன் விநாயகர் பைரவர் சகிதம் காட்மாண்டு வீதிகளில் மூன்று நாள் ஊர்வலமாக அழைத்து வருவார்கள்.

இந்த திருவிழா அவர் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டதாக சொல்கிறார்கள். அப்போது பொதுமக்கள் வணங்கி ஆசி பெற முடியும். பொதுவாக காலை நேரத்தில் சுமார் எட்டு மணிக்கு இந்த பெண் குழந்தை எல்லோரையும் வெளியே வந்து ஆசீர்வதித்து பின் உள்ளே சென்றுவிடுவார். எப்போதும் அரசர்கள் இந்த பெண் தெய்வத்திடம் ஆசி பெற்று தான் வெளியே செல்வார்கள். ஒவ்வொரு வருஷமும் விழாவின் போதும் அரச வம்சத்தினர் அனைவரும் ஆசி பொறுப்பாளர்கள். இதற்கென தனி இடம் அங்கு அமைந்துள்ளது. பழம் போன்றவற்றை இந்த பெண் தெய்வத்தின் காலடியில் வைத்து வணங்குவார்கள் அப்போது அமைதியாக இந்த குழந்தை இருந்தால், ஏற்றுக் கொண்டதாக அர்த்தம். மறுப்பு தெரிவித்தால், அல்லது எழுந்து போய் விட்டால், அது அப சகுனமாக கருதப்படுகிறது. இந்தப் பெண் தெய்வம் (வயதுக்கு வந்த பிறகு) பூப்பெய்திய பின் திருப்பி அனுப்பி விட்டு, வேறு ஒரு பெண் குழந்தையை தேர்ந்தெடுப்பார்கள். இந்த குழந்தைகளுக்கு அரசாங்கம் மாதாமாதம் உதவித்தொகை வழங்கி வருகிறது.