ராமேஸ்வரத்தை் ராமசேது என்று அழைப்பார்கள். தமிழகத்தின் தென்கோடியில் உள்ள உயர்ந்ததீர்த்தமும், ஒரு நல்ல ஷேத்திரமும் ஆகும். ஸ்ரீராமபிரான் இராவணனை ஜெயித்த பிறகு அவர் கட்டிய பாலத்தை தனுசின் நுனியால் உடைத்தார். எனவே, இதற்கு தனுஷ்கோடி என்று பெயர் வந்தது. இங்கு ஸ்நானம் செய்து மணல் எடுத்துக் கொண்டு பின் காசி கயா பிரயாகை என்று வட தேச யாத்திரை செல்வார்கள். பின் த்ரிவேணி சங்கமத்தில் இருந்து கங்கா ஜலம் எடுத்து வந்து ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்து யாத்திரை பூர்த்தி செய்வார்கள். ராமேஸ்வரம் செல்பவர் ஸ்நாநம் செய்யவேண்டிய புண்ய தீர்த்தங்கள் மொத்தம் 64. அறுபத்து நான்காவது தனுஷ்கோடி என்று அழைக்கபடும் கோடிக்கரை. இது மஹோததி, ரத்நாகரம் என்ற இரு கடலும் கூடுமிடமிது. சிறப்பு: "ஸேதும் த்ருஷ்ட்வா ஸமுத்ரஸ்ய ப்ரும்மஹத்யாவ்ய போஹதி" ராமஸேதுவைத் தரிசித்த மாத்திரத்தில் ப்ரும்மஹத்தி பாபம் அகலும் என்று சாஸ்திரம் கூறுகிறது. பொதுவாக ராமேஸ்வர யாத்ரையில் செய்ய வேண்டியது
ராமேஸ்வரத்தில் லக்ஷ்மண தீர்த்தம் சென்று வபநம் ஸ்நாநம் ஸங்கல்பம் ஹிரண்ய ஸ்ம்ராத்தம் பிண்ட தாநம் ஸ்வாமி தர்பம் செய்து ஆலய அருகிலும், ஆலயத்திலும் உள்ள தீர்த்தங்களில் ஸ்நாநம், செய்து ஸ்ரீ ராமநாதர் அர்ச்சனை செய்து முடித்து தநுஷ்கோடி செல்லவேண்டும். அங்கு ஒவ்வொரு ஸ்நாநத்திற்கும் அங்கமாக ஸங்கல்பம் ஸநாநாங்க தர்ப்பணம் மடிவஸ்த்ரம் அணிந்து செய்யவேண்டும். ஸநாநாங்க தர்ப்பணத்தைத் தவிர, ஸுக்ரீவன் நளன் மைந்தன் ஸீதா லக்ஷ்மணன் ஸ்ரீராமசந்த்ரன் முதலியவர்களை அங்கு த்யாநம் செய்து பிப்பலாதர் முதல் ஸீதைவரை எல்லோருக்கும் 3 முறை தர்ப்பணம் செய்யவேண்டும்.
கோடிக்கரையில் ஒரு ஸ்ராத்தம் ஹிரண்யமாகவாவது செய்து அரிசி எள்ளு இவைகளால் க்ஷேத்ரபிண்ட தாநம் செய்யவேண்டும். பிறகு ராமேஸ்வரம் வந்து கோடி தீர்த்தத்தில் ஸ்நாநம் செய்து பின் ப்ராம்மண ஸமாராதனை செய்து யாத்ரையைப் பூர்த்தி செய்யவேண்டும். காசி யாத்திரை செய்வதானால் கோடிக்கரையில் மணலை எடுத்து ஸேது மாதவர் வேணி மாதவர் பிந்துமாதவர் என மூன்றாகப் பாவித்துப் பூஜை செய்து வேணிமாதவராகக் கருதி பூஜைசெய்த மணலை எடுத்துக் கொண்டு கிளம்பவேண்டும். இதை பிரயாகையில் கரைக்க வேண்டும்.
அறியாமல் மிருகங்களைக் கொன்றது, அக்ஞாநத்தினால் கர்மாக்களை விட்டது, ஜயிலில் வஸித்தது, அன்யமதம், அன்ய வழிபாட்டு ஸ்தலங்களுக்கு சென்றது முதலிய பாபங்களுக்கு ப்ராயசித்தம் செய்துகொள்ள முன்னம் பலர் ராமஸேது செல்ல வேண்டும். ஸேது தர்நத்தாலும் ஸ்நாநமாத்ரம் செய்தாலும் அந்த பாபங்கள் அகலும். பாபங்கள விலக்கி ஸந்ததி வளர்ச்சியை விரும்புபவர்கள், விதிப்படி பொதுவான யாத்ரைகளைச் செய்து திலஹோமம் ஸர்ப்பராந்தி, சிவலிங்க ப்ரதிஷ்டை, நாகப்ரதிஷ்டை கோதாநம், முதலியவைகளைச் சௌகர்ய படும் இடத்தில், கோயிலில் செய்வது நல்லது. காசி யாத்திரை முடித்த பின் மீண்டும் ராமேஸ்வரம் சென்று ராமநாத சுவாமிக்கு ப்ரயாகையில் எடுத்த கங்கை தீர்த்தத்தால் அபிஷேகம் செய்ய வேண்டும்.
Copyright © 2023 Om Subha Yatra. All Right Reserved. Designed by Amsonwebz.