Budhanilkantha Temple

Budhanilkantha Temple

நேபாளத்தை ஆளும் ராஜாக்கள் இந்த கோயிலுக்கு வந்து தரிசிப்பது இல்லை. சுவாமியை பார்க்கக் கூடாது என்ற ஐதிகம் உள்ளதாகவும் கூறுகிறார்கள். முன்பு நேரடியாக இக்கோயிலில் நாங்கள் தொட்டுசெய்து இருக்கிறோம். ஆனால் தற்போது யாரும் தொடுவதற்கு அனுமதிப்பதில்லை. இந்த (விஷ்ணு பகவான்) புத்த நீல கண்டர் பெருமாள் தண்ணீரில் மிதப்பதாக நம் நாட்டிலுள்ளவர்கள் நம்புகின்றனர். ஆனால் அவ்வாறு கிடையாது. ஜல நாராயணர் என்றும் நம் நாட்டில் இருந்து செல்பவர்கள் கூறுகிறார்கள். ஆனால் இந்த சுவாமி விஷ்ணு பகவான் ஜல நாராயணர் கிடையாது. இக்கோயில் அற்புதமான சக்தி கொண்ட ஒரு பெருமாள் கோயில் ஆகும். இங்கு உருத்திராட்ச மரம் உள்ளது. வேத பாடசாலையில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. புத்தர், சிவன், பெருமாள், மூவரும் ஒரே உருவமாக காட்சி தருவதாக நேபாள பண்டிதர்கள் சொல்கிறார்கள்.