Pashupatinath Temple

Pashupatinath Temple

பசுபதிநாத் கோவில் உலகெங்கிலும் உள்ள பக்தர்களின் மிக முக்கியமான யாத்திரைத் ஸ்தலங்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது. காத்மாண்டுவில் உள்ள ககாட்சியளிக்கிறார்கள்.கோ சாலாவின் அருகே இக்கோயில் அமைந்துள்ளது. இந்து மதத்தின் படி, பசுபதிநாதர் பிரபஞ்சத்தின் பாதுகாவலராகவும் நேபாள மக்களின் காவல் தெய்வமாகவும் கருதப்படுகிறார். உலகம் முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான இந்து பக்தர்கள் இக் கோயிலுக்கு வருகிறார்கள். வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சிறிய கோவில்கள் மற்றும் சன்னதியில் உள்ள பல்வேறு கடவுள் மற்றும் தெய்வங்களின் சிற்பங்கள் மீது ஈர்க்கப்படுகிறார்கள். மரச் சிற்பங்கள், சிலைகள் மற்றும் இந்துக் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட வெவ்வேறு சிற்பங்கள்.

சிவன் மற்றும் வளாகத்தில் உள்ள மற்ற தெய்வங்கள் கோயிலின் கலை வளத்தை பிரதிபலிக்கின்றன. கோவில் புனிதமான பாக்மதி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது, அதே நேரத்தில் இந்துக்களின் உடல்களை தகனம் செய்வதற்காக கட்டப்பட்ட இடமும் உள்ளது. சிவராத்திரியை முன்னிட்டு நேபாளம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான இந்து பக்தர்கள் கோயிலுக்கு வருகை தருகின்றனர். இது தவிர, நேபாளப் பெண்களால் அனுசரிக்கப்படும் ஹரிபோதனி ஏகாதசி, பாலசதுர்தசி மற்றும் தீஜ் பண்டிகையின் போது, ​​கோயிலில் பக்தர்கள் அதிக அளவில் வருகை தருகின்றனர். அதேபோல், ஒவ்வொரு சனி மற்றும் திங்கட்கிழமைகளிலும் சிவபெருமானின் பக்தர்கள் கோயிலில் திரள்வார்கள். சிவலிங்கம் பண்டைய காலத்தில் மன்னர் சபுஷ்பதேவ் என்பவரால் அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. புனித ஆலயம் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளங்களில் பட்டியலிடப்பட்டுள்ளது. சர்வதேச விமான நிலையத்திலிருந்து 2 கிமீ தொலைவில் உள்ள கோவிலுக்குள் இந்துக்கள் அல்லாதவர்கள் நுழைவது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது. ஜெகத்குரு ஆதி சங்கர பகவத் பாதர் இக்கோயிலின் வில்வ மரத்தின் அடியில் தவம் செய்து சிவபெருமானின் அற்புதத்தை இங்குள்ள ராஜாவுக்கு காட்டியதாக சொல்கிறார்கள். ஜெகத்குரு தவம் செய்த வில்வ மரத்தை சுற்றி சிறு ஆலயம் கட்டி உள்ளார்கள். இதனுள் ஜகத்குரு ஆதிசங்கரரரும், அவரின் சீடர்களான, சுரேஷ்வரர், தோடகர், அஸ்தாமலகர் பத்மபாதர், ஆகிய நான்கு பேரும் இங்கு காட்சியளிக்கிறார்கள்.

பசுபதிநாத் கோவில் பிரதான சன்னதியில் கர்நாடகாவை சேர்ந்த பண்டிதர்கள் தான் பூஜை செய்கிறார்கள் . இதை எதிர்த்து நேபாளி பண்டிதர்கள் சில வருடங்களுக்கு முன் பிரச்சினை செய்தபோது தீர்ப்பு கோயிலின் மூலஸ்தானத்தில் பணிபுரியும் பண்டிதர்களுக்கு சாதகமாக வந்துள்ளது .இந்த பண்டிதர்கள் திருமணம் ஆகி அவர்களுக்கு குழந்தை பிறக்கும் போது கர்நாடகாவில் தான் குழந்தை பிறக்க வேண்டுமென்று சம்பிரதாயம் உள்ளதாக கூறுகிறார்கள். கர்நாடகாவில் பிறந்து நாமகரணம் செய்து பின் நேபாளத்திற்கு அழைத்துச் செல்கிறார்கள். தற்போது ,நேபாள பண்டிதர்களும், இந்தியாவிலிருந்து சென்று தங்கியிருந்து ,பரம்பரை பரம்பரையாக, பூஜை செய்து வரும் பண்டிதர்களும், ஒற்றுமையாகவே எல்லா விழாக்களையும் கொண்டாடுகிறார்கள்.